தமிழ் தேசிய கூட்மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக கொழும்பு குற்றப்புலனாய்பு பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதிவான் நிசாந்த அபு ஆராச்சி சட்டமா அதிபரின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.சிறிலங்காவின் யாப்புக்கு எதிராக பிரிவினை தூண்டும் வகையில் உரையாற்றியதாக தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிவான் சட்டமா அதிபரின் எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான சிசேஸ்ட்ட சட்டத் தரணி எஸ்.தவராஜா கடந்த 5ம் திகதி தாக்குதல் செய்யப்பட்ட வழக்கை பாரமெடுக்கவோ அல்லது விசாரணை செய்யவோ இந்த நீதி மன்றத்திற்க அதிகாரமில்லை. அத்துடன் காவல்துறை மா அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய வழக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ள்பபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட வேண்டும். உயர் நீதிமன்றதில் முறைப்பாடு செய்யப்பட்டு குறிப்பிட்ட தரப்பினரை தடை விதித்த பின்னர் மேல் முறையீடு நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட வேண்டும்.
எனவே குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் செய்யப்பட்ட முறையீடு இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கடவு சீட்டுக்களை நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும் என தெரிவித்த போதிலும் அவ்வாறான ஒரு உத்தரவை நீதிமன்றத்தினால் விடுக்கப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.உ பா.அரியநேந்திரன் மருத்துவ பரிசோதனைக்காக இந்தியா சென்ற போது விமான நிலையத்தில் வைத்து மேல் இடத்து உத்தரவு என தெரிவித்து அவரின் பயணத்தை தடை செய்தமை மற்றும் யார் அந்த மேல் இடம் என்பதனையும் நீதி மன்றில் குற்றப்புலனாய்பு பிரிவினர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளினால் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்பு உரிமை மீறல் தொடர்பாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் எடுத்துக் காட்டினார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment