இதேவேளை, அறிவியல் நகர் ஊடாக முன்னேற முனைந்த படையினரில் 29 படையினர் கொல்லப்பட்டு 60ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். களமுனைகளில் சிதறிக்கிடந்த படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை மணிக்கு பல்குழல் எறிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிககள் ஆகியனவற்றின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் உடலங்களும், பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது,
முறிகண்டிக்கு வடமேற்கில் உள்ள அறிவியல்நகர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு செறிவான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதல் இன்று மாலை ஆறு மணி வரை நீடித்தது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.




_________
Sankathi.com












No comments:
Post a Comment