Wednesday, 10 December 2008

** ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கை உட்பட 16 நாடுகளுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பு!

கடந்த பல மாதங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிங்களப் பேரினவாதங்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் இறுதியில், இலங்கை உள்ளிட்ட மேலும் 16 நாடுகளுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்துறை அதிகாரி கத்தரின் அஸ்ட்டன் அறிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தினை முன்னிலைப்படுத்தி ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையினை நீடிப்பு விடயத்தில் இழுத்தடிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 2009 ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில், நேற்றைய தினம் இச்சலுகை நீடிப்பு குறித்து ஐரோப்பியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் 176 நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் சுமார் 6400 ஏற்றுமதிப்பொருட்களுக்கு இந்த வரிச்சலுகை செல்லுபடியாகும்.இச்சலுகை நீடிப்பால் எதிர்வரும் ஆண்டில் இலங்கை எதிர்நோக்கவிருந்த பாரிய பிரச்சனைகளில் ஒன்றான கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் பேருக்கான வேலைவாய்பு விடயத்திலிருந்து தப்பிக்கொண்டுள்ளது.
_________
Pathivu.com

No comments: