Wednesday, 10 December 2008

*** இன்று 60வது சர்வதேச மனித உரிமைகள் நாள்.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் (universal declaration of human rights) ஆவது வருட பூர்த்தியையும் இன்றைய தினம் குறித்து நிற்கிறது. மனித உரிமைகளைப் பேணிக் காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.


ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றையடுத்து 1950 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சகல மனிதப் பிறவிகளும் சமத்துவமானதும் விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றன என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும் செயற்திட்டங்களும் இன்றைய தினத்தில் உலகம் பூராவும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப்பொருள் "எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்' (dignity and justice for all of us)என்பதாகும்.
-
இன்றைய மனித உரிமை நாளில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகளை வெற்றிகொள்ளவதற்காக தொடர்து குரல் கொடுப்போம்..
____________________

No comments: