இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேருமாறு இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக "ட்ரான்ஸ்கரண்ட்" செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.இந்திய மண்ணில் வைத்து இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இந்த உத்தரவை அடுத்து புதுடில்லி ஜவகர்லால் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சிவாஜிங்கம், உடனடியாக சென்னைக்கு திரும்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வை கோபாலசாமியின் தலைமையில் சென்னையில் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் போது சிவாஜிலிங்கம் அதில் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து, சிவாஜிலிங்கம் இந்திய மண்ணில் இருந்து வெளியேறினால், அதன் மூலம் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் அரசியல் பிரச்சினைகளை சந்திக்கலாம் என "ரான்ஸ்கரண்ட்" செய்திசேவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிங்கம் திரும்பினால் கொல்லப்படலாம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி அச்சம் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து சிவாஜிலிங்கம் சென்னையில் அரசியல் அடைக்கலம் கோரலாம் என தமிழக அரசியல் தரப்புகள் கருதுவதாக ட்ரான்ஸ்கரன்ட் செய்திசேவை எதிர்வு வெளியிட்டுள்ளது.
எனினும் இது குறித்து தனக்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எவரிடமிருந்தும் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இது திட்டமிட்டு பரப்பப்படும் செய்தியாக இருக்கலாம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
_________
Pathivu.com








No comments:
Post a Comment