Friday, 12 December 2008

** பிரித்தானிய உயர்ஸ்தானியர் தமிழ் நாட்டு முதல்வரை சந்தித்து உரையாடியுள்ளார்!

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை பிரித்தானிய உயர்ஸ்தானியர் சேர்.றிச்சட் ஸ்ரெக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து சிநேக பூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்மையில் மும்பாயில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரத்தை எவ்வாறு முகம் கொடும்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
_________
Pathivu.com

No comments: