தமிழர்களின் தலையெழுத்து விரைவில் மாறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-சிறீலங்காப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை நடத்துவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீதே தாக்குதலை நடத்தி வருகின்றது. நேற்று முன்தினமும் ஏதிலிகள் முகாம் ஒன்றில் சிறீலங்கா வான்படையினர் வான் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மூவர் கொல்லப்பட்டதுடன் பதினெட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.தமிழர்களின் தலையெழுத்து இவ்வாறுதான் இருக்கின்றது. இவ்வாறான தலையெழுத்து விரைவில் மாறும். தமிழர்கள் தனிநாடு அமைப்பு வாழும் சூழ்நிலை விரைவில் ஏற்படும்.
வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தற்காலிக கூடார வசதிகள் இல்லை. அவர்களுக்கு எனக் கொண்டு செல்லப்படும் கூடாரங்களும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்டு அங்கு ஐனநாயகம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்ற போதும், அங்கு படுகொலைகளும், ஆட் கடத்தல்களும் இடம்பெற்றே வருகின்றன. இப்படுகொலைகள், ஆட் கடத்தல்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தமாட்டாது. ஏனெனில் அரசாங்கத்துடன் தொடர்புடை துணை இராணுவக் குழுக்களே இவ்வாறான மனித உரிமை மீறல்களை தொடச்சியாகச் செய்து வருகின்றது என அவர் அங்கு மேலும் உரையாற்றியிருந்தார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment