Monday, 1 December 2008

** படையினரின் எறிகணைத் தாக்குதலில் பாடசாலைச் சிறுமி பலி! மற்றொருவர் படுகாயம்!

சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் பாடசாலைச் சிறுமி கொல்லப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை வட்டக்கச்சி மதியம் 1:00 மணியளவில் சிறீலங்காப் படையினர் மக்கள் குடிமனைகள் மற்றும் தெருக்களை இலக்கு எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

வட்டக்கச்சியில் பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய 7 அகவையுடை அருளானந்தம் நிறோஜினி என்ற சிறுமி எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் இன்றைய எறிகணைத் தாக்குதலில் 31 அகவையுடைய சிவசம்பு விநாயகவேல் என்ற மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளார்.
_________
Pathivu.com

No comments: