முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலிருந்து படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் இடம்பெயரும் மக்களுக்கான போக்குவரத்து உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக குழவிசுட்டான், மாறாஇலுப்பைப் பகுததிகளிலிருந்து இடம்பெயரும் மக்களை அவர்களின் உடமைகளுடன் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வாகனங்களில் ஏற்றி இறக்கி வருகின்றது. குமுழமுனை, ஒட்டுசுட்டான் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் இவ்வாறான உதவிகளை தமிழர் புனர்வாழ்வக்கழகம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com








No comments:
Post a Comment