Tuesday, 9 December 2008

** வைத்திய சிகிச்சைக்காக இந்தியா சென்றபோதே அரியநேத்திரன் எம்.பி. திருப்பி அனுப்பப்பட்டார்! - பி.பி.ஸிக்கு அவரே தகவல்.

"ஏற்கனவே திட்டமிட்டபடி வைத்திய சிகிச்சைக்காக இந்தியாவிற்குச் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோதே என்னைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திருப்பியனுப்பினர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு - மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு கூறியவை வருமாறு:-

"நான் ஏற்கனவே இந்தியாவில் வைத்திய சிகிச்சை ஒன்றிற்காக பதிவை மேற்கொண்டிருந்தேன். அந்த சிகிச்சை நாளை மறுதினம் (அதாவது செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

அந்த சிகிச்சைக்காக இந்தியாவிற்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தபோதே நான் திருப்பியனுப்பப்பட்டேன்.விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் என்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என எனக்குத் தெரிவித்தார்.
இந்த விடயத்தை எமது கூட்டமைப்புத் தலைவர் ஊடாக நாளை (அதாவது இன்று) சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளேன் - என்றார்.
_________
Uthayan.com

No comments: