Tuesday, 9 December 2008

** மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரின் கொடும்பாவி எரித்து மதிமுக போராட்டம்!

தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என வர்ணித்துப் பேசிய இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்து மதுரையில் மதிமுகவினர் இன்று கொடும்பாவிகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைப் பகுதியில் மாவட்ட செயலாளர் பூமிநாதன் தலைமையில் திரண்ட 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் ராஜபக்சே மற்றும் பொன்சேகாவைக் கண்டித்து கோஷமிட்டனர்.பின்னர் இருவரது கொடும்பாவிகளையும் மதிமுகவினர் தீவைத்துக் கொளுத்தினர்.
________________

No comments: