Tuesday, 2 December 2008

** பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக எம்.பிக்கள் சந்திப்பு!

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித்த லைவர்கள் குழு பிரதமரை சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவினர் பிரதமரை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லி சென்ற தமிழக எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.

அப்போது இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பிக்கள் பிரதமரை வலியுறுத்தினர். திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள், இக்கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அதிமுக, மதிமுக எம்.பிக்கள் இதில் இடம் பெறாமல் புறக்கணித்தனர்.
____________

No comments: