Wednesday, 3 December 2008

** ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு! ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு அறிவித்திருப்பதாக அனைத்துலக வணிகத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ரனுகே தெரிவித்தார்.

இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிக்கவேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுடனான விசாரணைகளை நடத்துவதற்காக அடுத்தவருட நடுப்பகுதி வரை ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தெரிவித்தாக அவர் தொவித்தார்.எனினும் இதனை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் விசாரணைகள் நிறைவடையும் வரை ஏற்றுமதி வரிச்சலுகை அமுலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை நீடிக்க முடியாது!
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை மேலும் 6 மாதகாலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அனைத்துலக வணிகத்துறை அமைச்சின் செயலாளர் ரனுகே இன்று தெரிவித்திருந்தார்.ஆனால், இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை மையப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகை நீடிக்க முடியாதென இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பகிரதமுயற்சி!
இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசு பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. ஆனாலும் மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அக்கறை காண்பிக்காத நிலையில் இந்த வரிச்சலுகையை புதிப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளதாக அறியவருகின்றது. ஆயினும் ஏற்கனவே நடப்பில் உள்ள இந்த ஆண்டிற்காக வரிச்சலுகை மனித உரிமை தொடர்பான விசாரணகள் முடியும் வரை தற்காலிகமாக தொடரும் என்று சிறீலங்காவிற்கான ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் ராணுகே தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் சிறிலங்காவில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை இழப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக ரணில் விக்கரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com

No comments: