Wednesday, 3 December 2008

** அம்பாறையில் இருவேறு தாக்குதலில் மூன்று சிறீலங்காப் படையினர் பலி! இருவர் படுகாயம்!

அம்பாறை கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் விடுதலை புலிகள் நடாத்திய அதிரடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை மாலை 5.25 மணியளவில் அம்பாறை உகந்த புங்கன் ஓயா பகுதியில் வீதிப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலை புலிகள் நடாத்திய அதிரடி தாக்குதலினால் இரு சிப்பாய்கள் கொல்லப்பட்டு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலை புலிகள் தெரிவிக்கின்றனர்.
-
தாக்குதலையடுத்து படையினர் சரமரியான துப்பாக்கி பிரயோகம், எறிகணை தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வனப்பகுதியில் ஊடுருவிய விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவர் பொறிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் விடுதலை புலிகளை தேடி வனப்பகுதிக்கு சென்ற படையினர் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் கஞ்சிகுடிச்சானாறு முகாமிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
_________
Pathivu.com

No comments: