Saturday, 6 December 2008

** சட்ட அதிபரின் அனுமதியுடனே வழக்குத் தாக்கல் செய்ய முடியும் - சிறீலங்கா உச்ச நீதிமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன், ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்காக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறீலங்கா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றே தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்து நிராகரித்துள்ளது.
_________
Pathivu.com

No comments: