பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது.அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிங்கா இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்றறுவதற்கான கால நிர்ணயமாக நவம்பர் மாதத்தின் இறுதிப்பகுதி கொள்ளப்பட்டிருந்தது.
நவம்பர் 26ம் திகதி கிளிநொச்சிக்குள் புகுந்து விட்டால் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளன்று இயல்பாகவே தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படத்தக்கதான எழுச்சியை இல்லதொழித்தல், அடுத்த நாள் மாவீரர் நாள் நிகழ்வுகளையும் தேசித்தலைவரின் மாவீரர் நாள் உரையினையும் குழப்பத்திற்கு உள்ளாக்குதல் என்பனவற்றை மகிந்த ராஜபக்சவும், சரத்பொன்சேகாவும் தனிப்பட்ட ரீதியில் எதிர்பார்த்திருந்தனர் எனவும் அவர் மேலும் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
_________
Sankathi.com








No comments:
Post a Comment