Thursday, 4 December 2008

** சிறீலங்காவின் கொத்துக் குடுண்டுப் பாவனைக்கு எதிராக நோர்வேயில் கவனயீர்புப் போராட்டம்!

கிளஸ்டர் குண்டுகள் என சொல்லப்படும் கொத்துக் குண்டுகளின் பாவனைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமொன்று 107 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்பமிட்டுள்ளது.


இன்று புதன்கிழமை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.உலக நாடுகளின் இந்த ஆக்கபூர்வமான முயற்சின் பின்னணியில் நோர்வே முதுகெலும்பாக நின்று பணியாற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சமகாலத்தில் நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைச் சிறார்கள் உட்பட பல நூற்றக்கணக்கான தமிழர்கள் கடும்பனியிலும் மாநகரசபை மண்டபத்திற்கு நேர்ரெதிராக திரண்டு
''இனப்படுகொலையை நிறுத்து"
"கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவிமக்களை கொல்லாதே"

போன்ற வாசகங்களோடு பல மணிநேரமாக நின்று, தமது உணர்வினை வெளிப்படுத்தினர்.


நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தால் நோர்வீஐிய மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை அரசு நடத்திவரும் இனப்படுகொலையின் உச்சக்கட்டமான கொத்துக் குண்டுத் தாக்குதல்கள் பற்றியும், வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் தொண்டர் அமைப்புக்களையும் கட்டாய பணிப்பில் வெளியேற்றி, தற்போது இலங்கையரசு அரங்கேற்றும் இனப்படுகொலையையும் விளக்கி துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.


இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த சில வெளிநாட்டு பிரதிநிகளிடம் நேரடியாக துண்டுப்பிரசுரங்களை கையளித்த தமிழீழ மக்கள், எம் மக்கள் படும் துன்பம் தொடர்பாகவும், எமது விடுதலை தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.


ஒஸ்லோ மாநகரசபையின் பெருமண்டபத்தில் மிக நேர்த்தியாக ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளும் வரிசைக்கிரமமாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட நிகழ்வை வெளியில் இருந்த அகலத்திரையில் பார்க்கக் கூடியதாகவிருந்தது.


இந்த கொத்தணிக்குண்டுகள் ஏற்படுத்தும் மிகமோசமான விளைவுகளை கருத்திற்கொண்டே மேற்படி ஒப்பந்தத்தை வல்லரசுகள் உட்பட பல நாடுகள் பாவனையில் இருந்து ஒழிக்கவேண்டும் என எடுத்த முடிவை பல சமாதான விரும்பிகளும் குறிப்பாக தமிழர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேவேளை சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தை இன்னமும் ஏற்றுக்கொள்ளாதது பல மனித உரிமை ஆர்வலர்களையும் தமிழர்களையும் ஏமாற்றமடையவைத்துள்ளது.

கொத்தணிக்குண்டுகளை இலங்கையரசு, வன்னியில் போர்அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கள் மீது வேண்டுமென்றே கடந்த சனியன்று வீசி, ஐந்து வயதுக்குழந்தை உட்பட இருவரை படுகொலை செய்ததோடு, மேலும் 7 சிறுவர்கள் உட்பட 21 பேரை படுகாயப்படுத்தியதும் தெரிந்ததே.
_________
Pathivu.com

No comments: