இலங்கையில் இடம்பெற்று வரும் கொடிய யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார்.இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவில் சம்பந்தப்பட்ட தரப்புகள் பேச்சுகளில் ஈடுபட வேண்டும் என்றும் புனித பாப்பரசர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்க்கும் பரிசுத்த பாப்பரசருக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து வழியுறுத்தப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு நிரந்தரமான, நீதியான அரசியல் தீர்வைக் காண்பதற்கான ஒரே வழி பேச்சுக்கான பாதையை வலுப்படுத்துவதேயென பரிசுத்த பாப்பரசர் இந்த சந்திப்பில் தெரிவித்தார்' என வத்திக்கான் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு முழுமையான மத சுகந்திரம் உட்பட சகல உரிமைகளும் தொடர்ந்தும் கிடைக்கும் என தாம் நம்புகிறார் என பாப்பரசர் கூறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
__________
Uthayan.com








No comments:
Post a Comment