Thursday, 4 December 2008

** படையினர் எறிகணை வீச்சால் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினர் மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயரும் பெரும்பாலான மக்கள் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்ற போதிலும் பல குடும்பங்கள் முல்லைத்தீவு மேற்குப்பகுதிகளான உடையார்கட்டு, விசுவமடுப் பகுதிகளை நோக்கியும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இதேவேளை, முள்ளியவளைப்பகுதிகளை நோக்கிப்படையினர் மேற்கொண்டு வரும் எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான மண்டபங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக முல்லை வலயக் கல்விப்பணிப்பாளர் மா. தேவேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பரீட்சை மண்டபங்கள் முலலைத்தீவு பாடசாலைக்கும், முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளன.
__________
Sankathi.com

No comments: