அனைத்து கட்சி குழுக் ஒன்றுகூடலில் ரி.எம்.வி.பி பிரதிநிதிகள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரும் ஆயுததாரிமான கருணா ஒருபுறமும், கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரிமான பிள்ளையான் மறுபுறமுமாக இருக்கின்ற நிலையிலேயே இக்குழப்பம் நிலவி வருகின்றது.கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் படுகொலைகளைக் கண்டித்து பிள்ளையான் அணியினர் தாம் அனைத்துகட்சிக் குழு ஒன்றுகூடலில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தது.இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அனைத்துகட்சி குழுக் கூட்டத்திற்று ரி.எம்.வி.பியை பிரதிநிதித்துவப் படுத்த கருணா அணியிலிருந்து இருவர் சென்றிருந்தர். இதனால் பெரும் குழுப்பம் ஏற்பட்டது.முன்னர் அனைத்து கட்சிக் குழு கூட்டத்திற்கு சுட்டுக்கொல்லப்பட்டவரான ரி.வி.எம்.வி தலைவர் ரகுவும், மட்டக்களப்பு நகர முதல்வர் சிவகீதாவும் பங்கேற்றனர். இந்த நிலையில் புதிதாக இருவர் சமூமளித்ததனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் பிரசன்னமாயிருந்த கருணா குழுவின் இரு பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் குழப்பமடைந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உண்மையான தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் யாரென்பதை அறியத்தருமாறு தேர்தல்கள் செயலகத்திடம் கோரியது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபால் எனவும், பொதுச் செயலாளர் கைலேஸ்வராஜா எனவும் தேர்தல்கள் செயலகம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கருணா தரப்பு பிரதிநிதிகள் இருவரையும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு திருப்பியனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
_________
Pathivu.com
Pathivu.com








No comments:
Post a Comment