Thursday, 4 December 2008

** போர் நிறுத்தத்திற்கு தயாரில்லை: எந்தச் சவாலையும் சந்திக்கத் தயார் - பிரதமர்!

போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண்டும். 15வது திருத்தச் சட்டத்தை பேசுவதற்கு முன்னர் பயங்கரவாதத்தை அழித்த பின்னர் அனைவரும் இருந்து பேசுவோம்.

பயங்கரவாத்திற்கு எதிராக நாங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை விடுவித்து வருகின்றோம். இதனுள் போர் நிறுத்தம் ஒன்றுக்குள் சென்று சிக்கிவிடமாட்டோம். எத்தகைய சாவல்கள் வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம்.படைத்துறை சார்ந்த விடயங்களை நாங்கள் தீர்மானிப்பதில்லை. அதனை அத்துறையில் இருப்போரே தீர்மானிப்பார்கள். இவர்களுக்கு நாங்கள் நிதியினையும், தேவைகளையும் வழங்க வேண்டும் என அவர் அங்கு மேலும் உரையாற்றினார்.
_________
Pathivu.com

No comments: